எங்களை பற்றி

அலமேலு நாயுடு தி௫மண தகவல் மையம் நாயுடு இனத்திற்கென்று திருச்சி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்கள் மையம் மூலம் நடை பெற்றுள்ளது. எங்களுக்கு வேறு கிளைகள் எதுவும் கிடையாது. ௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நேரடியாக வந்து பதிவு செய்வது மற்றொன்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்வது. ஜாதகங்களை Online-ல் பார்த்துக் கொள்ளலாம். இது பற்றிய அதிக தகவல்களை நேரிலோ அல்லது போன் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்.
 
கடந்த பல வருடங்களாக இந்த தகவல் மையம் வெற்றிகரமாக செயல்பட்டு வந்துகொண்டிருக்கிறது. காரணம், எங்களின் சேவையும், வாடிக்கையாளர்களின் ஓத்துழைப்புமே ஆகும். அவர்களின் நம்பிக்கையை இந்த நிறுவனம் பெற்றுள்ளதால், ஒவ்வொரு நாலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. எங்களின் சீரிய நோக்கம் எதுவெனில், தற்போது வழங்கும் சேவையை மேம்படுத்துவதே ஆகும்.

உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

அலமேலு நாயுடு திருமண தகவல் மையம்

25

வருட அனுபவம்

1500

திருமணங்கள்

15000

வாடிக்கையாளர்கள்

1

தகவல் மையம்

உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

அலமேலு நாயுடு திருமண தகவல் மையம்

விளம்பர வீடியோ

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

(Terms and Conditions)
 
1. எக்காரணம் கொண்டும் கட்டியத் தொகை திருப்பித் தர இயலாது. பதிவு செய்த நபர்கள் மட்டுமே Onlineல் பார்க்க முடியும். 
 
2. நாயுடு இனத்தவர்கள் மட்டும் பதிவு செய்யவும். புரோக்கர்களுக்கு அனுமதி இல்லை. புரோக்கர் கமிசன் கிடையாது.
 
3. எங்களுடைய சேவை தகவல் மட்டுமே. மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். 
 
4. திருமணம் நிச்சயம் செய்தவுடன் மையத்திற்கு தெரியப்படுத்தவும். அவ்வாறு தெரிவிக்காமல் இருந்து அதனால் ஏதேனும் குழப்பங்கள் உண்டானால் அதற்கு மணமக்கள் வீட்டார்களே பொறுப்பு. 
 
5. மேலும், எங்களுடைய சேவை நாயுடு இனத்தவர்களுக்கு மட்டுமே.

வெப் சைட் - ஐ பயன் படுத்தும் முறைகள்

1. குரோம் அல்லது வேறு ஏதேனும் பிரவுசரில் பயன்படுத்தும் போது சரியான URL (https://alamelunaidumatrimonial.com) உள்ளதா என பார்த்துக்கொள்ளவும்

2. பின்பு "உள் நுழைய" என்ற இடத்தில் கிளிக் செய்தால். தெரிகின்ற பாப் அப் மெனுவில் உங்கள் மொபைல் எண் (USER NAME) மற்றும் உங்கள் பதிவு என்ணை (PASSWORD) பதிவு செய்யவும்.

3. LOGIN ஆனவுடன் டாப் மெனுக்களில் உள்ள "தேடல்" என்பதனை கிளிக் செய்தால் பாலினம் மற்றும் ID போன்ற தகவல்கள் இருக்கும். நீங்கள் ஆன் என்றால் பெண்களின் ப்ரொபைல்ஸ் - ம், பெண் என்றால் ஆண்களில் ப்ரொபைல்ஸ்-ம் வரும். ஆகையால் நீங்கள் பாலினம் என்பதனை தேர்வு செய்ய வேண்டியதில்லை.

4. மேலும் உங்களுக்கு மற்றவரின் ID தெரிந்தால் அந்த ப்ரொபைல் - ஐ மட்டும் பார்க்கலாம். பொதுவாக பார்வையிட "தேடு" என்பதை கிளிக் செய்யவும்.

5. அதன் பின் ப்ரொபைல்ஸ் ஓவ்வொன்றாக தெரியும். தெரிகின்ற ப்ரொபைல் படத்தினை கிளிக் செய்தால் அவர்களை பற்றிய மற்ற விவரங்கள் யாவும் தெரியும். இந்த இடத்தில் "அச்சிடுக" என்பதனை கிளிக் செய்தால் பிரிண்ட் பார்மட்டில் தகவல்கள் இருக்கும்.

6. மேற்கூறிய அணைத்து விவரங்களும் பணம் செலுத்தி சந்தாதாரர்களுக்கு பொருந்தும். மற்ற வாடிக்கையாளர்கள் "இலவச தேடல்" என்பதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் ஆண் மற்றும் பெண்களின் விவரங்கள் இருக்கும். (ஒரு சில தகவல்கள் மட்டும் பகிரப்பட்டிருக்கும்)

7. இது தவிர வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 98656 63683 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேலும் டெஸ்க் டாப் அல்லது லேப்டாப் பயன்படுத்துவது சிறந்தது. தவிர்க்க முடியாதவர்கள் மொபைல் பயன்படுத்தியும் ப்ரொபைல்ஸ் - களை பார்த்துக் கொள்ளலாம்.

Location for : Listing Title